Home வணிகம்/தொழில் நுட்பம் இன்போசிஸ் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக விஷால் சிக்கா பொறுப்பேற்றார்!

இன்போசிஸ் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக விஷால் சிக்கா பொறுப்பேற்றார்!

581
0
SHARE
Ad

Vishal Sikkaபெங்களூர், ஜூன் 13 – கணினி மென்பொருள் ஏற்றுமதி சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பிரபல இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக விஷால் சிக்கா நியமிக்கப்பட்டுள்ளார் என இன்போசிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கணினி மென்பொருள் ஏற்றுமதியில் இரண்டாவது பெரிய நிறுவனமாக விளங்கும் இன்போசிஸில் முதல் முறையாக தற்போது தான் நிறுவனர் அல்லாத ஒருவர் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 இன்போசிஸ் நிறுவனம் 1981 -ல் ஆரம்பிக்கப்பட்டது. இதை துவக்கிய 7 பொறியாளர்களில் எஸ்.டி.சிபுலாலும் ஒருவர். இவருக்குப் பதிலாக தற்போது விஷால் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஆகஸ்ட் 1 – ம் தேதி முதல் புதிய பொறுப்பை இவர் ஏற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான என்.ஆர்.நாராயணமூர்த்தி வரும் அக்டோபர் 11 -ம் தேதி முதல் இதன் தலைவராக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷால் சிக்கா ஜெர்மன் நிறுவனமான எஸ்.ஏ.பி.யின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தார். அங்கிருந்து கடந்த மே மாதம் விலகினார். இவர் இன்போசிஸின் நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பு வகிப்பார்.

சிக்கா, ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கணினித் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். ஜெர்மன் நிறுவனமான எஸ்.ஏ.பி.யில் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் பதவி வகித்துள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தில் உயர் பதவியை வகிப்பதில் பெருமை கொள்கிறேன் என சிக்கா தெரிவித்துள்ளார்.