Home நாடு பினாங்கில் கர்ப்பால் சிங் பெயரில் சாலை திறப்பு!

பினாங்கில் கர்ப்பால் சிங் பெயரில் சாலை திறப்பு!

575
0
SHARE
Ad

Karpalஜார்ஜ் டவுன்ஜூன் 13- பினாங்கின் சுங்கை பினாங்கு பகுதியில் அமைந்துள்ள லெபு சுங்கை பினாங்கு சாலைக்கு ’பெர்சியரான் கர்ப்பால் சிங்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் நேற்று வியாழனன்று அதை தொடக்கி வைத்தார்.

லெபு சுங்கை பினாங்கு 4 பெர்சியாரான் கர்ப்பால் சிங் 1 எனவும், லெபு சுங்கை பினாங்கு 5, பெர்சியாரான் கர்ப்பால் சிங் 2 எனவும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த ஏப்ரல் மாதம்  நடந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்த ஜசெக தலைவர் கர்ப்பால் சிங்கின் சேவைகளை பெருமைப்படுத்தும் வகையில் இந்த சாலைக்கு அவரது பெயர் வைக்கப்பட்டள்ளது என்று லிம் குவான் எங் தெரிவித்தார்.

மேற்கண்ட சாலைகளுக்கு மறு பெயரிடப்பட்டதன் மூலம் காலஞ்சென்ற கர்ப்பால் சிங்கின் பங்களிப்புகள் எப்போதும் நினைவில் கொள்ளப்படும் என்றும் லிம் குறிப்பிட்டார்.

மறைந்த கர்ப்பாலின் பெயர் கொண்ட சாலையைத் திறந்து வைத்ததை பினாங்கு அரசியல்வாதிகள் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இந்நிகழ்வில் கர்ப்பால் மனைவி, அவரின் மகன்கள் மற்றும் பல அரசியல் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.