Home இந்தியா புதிய அட்டர்னி ஜெனரலாக முகுல் ரோகத்கி நியமனம்: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

புதிய அட்டர்னி ஜெனரலாக முகுல் ரோகத்கி நியமனம்: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

587
0
SHARE
Ad

Mukul-Rohatgi-new-Attorney-Generalபுதுடெல்லி, ஜூன் 13 – புதிய அட்டர்னி ஜெனரலாக முகுல் ரோகத்கி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் இருந்து போது ஜி.இ.வாகன்வதி அட்டர்னி ஜெனரலாக (மத்திய அரசின் தலைமை வக்கீலாக) பதவி வகித்து வந்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை போன்றே சொலிசிட்டர் ஜெனரல், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களும் பதவி விலகினர்.

புதிய அரசு ரஞ்சித் குமாரை சொலிசிட்டர் ஜெனரலாக நியமித்தது. 6 புதிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் புதிய அட்டர்னி ஜெனரலாக மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி நேற்று நியமிக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டது. இவர் நாட்டின் 14–வது அட்டர்னி ஜெனரல் ஆவார்.

#TamilSchoolmychoice

முகுல் ரோகத்கி, டெல்லி ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி அவாத் பிகாரி ரோகத்கியின் மகன் ஆவார். முகுல் ரோகத்கி, மும்பையில் சட்டம் படித்தவர். படித்து முடித்தவுடன் உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வாலிடம் இளநிலை வழக்கரிஞராக பணியாற்றினார். பின்னர் உச்ச நீதிமன்ற வழக்கரிஞராக உயர்ந்தார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ஆஜராகி உள்ளார். புதிய அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கியின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.