Home கலை உலகம் கௌதம் மேனனுக்காக 20 வயது வாலிபராக மாறும் அஜீத்?

கௌதம் மேனனுக்காக 20 வயது வாலிபராக மாறும் அஜீத்?

470
0
SHARE
Ad

ajithசென்னை, ஜூன் 13 – கௌதம் மேனன் படத்தில் அஜீத் 20 வயது இளைஞராக வருகிறாராம். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் இன்னும் பெயர் வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு தற்போதைக்கு தல 55 என்று தலைப்பு வைத்துள்ளனர்.

தினமும் படம் குறித்து ஏதாவது ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தல 55 படத்தில் அஜீத் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பது உறுதியாகிவிட்டது. படத்தில் அஜீத் குமார் ஒரு கதாபாத்திரத்தில் 20 வயது இளைஞராக நச்சென்று வருகிறாராம்.

ajith-fitnessமற்றொரு கதாபாத்திரத்தில் வழக்கமான சால்ட் அன்ட் பெப்பர் தலையோடவே வருகிறாராம். வாலிபர் கதாபாத்திரத்திற்காகத் தான் அஜீத் ஜிம்முக்கு சென்று உடலை ஒல்லியாக ஆக்கியுள்ளாராம். 44 வயதில் ஆமீர் கான் 20 வயது வாலிபராக 3 இடியட்ஸ் படத்தில் நடித்தார். இந்நிலையில் 43 வயதாகும் அஜீத் 20 வயது இளைஞராக நடிக்கவிருக்கிறார்.

#TamilSchoolmychoice