காபூல், ஜூன் 16 – ஆப்கனில் அதிபருக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பெரும் அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி அமைதியான முறையில் நேற்று முன்தினம் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிபர் வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை, தேர்தல் முறைகேடு உள்ளிட்ட காரணங்களால் அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் போர் பதற்றம் நிலவும் வேளையில், அந்நாட்டு அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெறுகிறது. தேர்தலை பொதுமக்கள் வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று தாலிபான்கள் மிரட்டல் விடுத்ததால், அங்கு சுமார் 4 லட்சம் பாதுகாப்பு வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
இந்த தேர்தலில், அதிபர் பதவிக்காக அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லா மற்றும் உலக வங்கியின் முன்னாள் அதிகாரி அர்ஷப் கனி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலின் முடிவுகள் அடுத்த மாதம் 22-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில், 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானாலும், அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து அங்கு நடைபெற்ற தேர்தல் ரத்து செய்யப்பட்டு, மறுதேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.