Home இந்தியா மத்திய பிரதேசத்தில் இளம்பெண்ணை கற்பழித்து நிர்வாண ஊர்வலம்!

மத்திய பிரதேசத்தில் இளம்பெண்ணை கற்பழித்து நிர்வாண ஊர்வலம்!

873
0
SHARE
Ad

madhyapradesh mapகண்ட்வா, ஜூன் 16 – மத்திய பிரதேசத்தில் இளம்பெண்ணை கற்பழித்து நிர்வாண ஊர்வலம் நடத்திய கணவர் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் கண்ட்வா மாவட்டத்தில் உள்ள பியாலி கேதா என்ற கிராமத்தை சேர்ந்தவர் கைலாஷ் ருமாலியா.

பழங்குடியின பிரிவை சேர்ந்த இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்தது. சொத்து பிரச்சனையால் மனைவி மீது கடும் ஆத்திரத்தில் இருந்த கைலாஷ் ருமாலியா, தனது மனைவியை பழிவாங்க நினைத்தார்.

இதற்கு தகுந்த தருணம் பார்த்துக்கொண்டிருந்த அவர், கடந்த 10-ஆம் தேதி தனது உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் 9 பேருடன் சேர்ந்து தனது மனைவியை அருகே உள்ள பகுதிக்கு வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றார்.

#TamilSchoolmychoice

பின்னர் இளம்பெண்ணின் உடைகளை களைந்து விட்டு அவரை நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்றனர். பின்னர் இளம்பெண்ணை, அவரது சிறுவயது மகனுக்கு முன்பாக, அந்த 10 பேரும் கற்பழித்தனர்.

இதனால் கடுமையாக அலறிய அந்த இளம்பெண், தாகத்துக்கு தண்ணீர் தருமாறு அந்த கயவர்களிடம் மன்றாடினார். ஆனால் சிறுநீரை குடிக்குமாறு இளம்பெண்ணை அவர்கள் கட்டாயப்படுத்தினர். இந்த கொடுமைகளை அரங்கேற்றிய பின் அந்த 10 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணை அவரது உறவினர்கள் மீட்டு, கண்ட்வா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து இளம்பெண் பிப்லாட் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது கணவர் உள்பட 10 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இளம்பெண் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவரது கணவர் கைலாஷ் ருமாலியா, சொத்து தகராறு காரணமாக தன் மீதும், கிராமத்தினர் மீதும் பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதாக தெரிவித்தார். மேலும் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பழங்குடியின இளம்பெண் ஒருவர் 10 பேரால் கற்பழிக்கப்பட்டு நிர்வாண ஊர்வலம் நடத்தப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு தொடரும் கற்பழிப்பு சம்பவங்களால் உத்தரபிரதேச மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.