Home கலை உலகம் தமிழ்ப் படங்களில் நடிக்க அஞ்சலிக்கு தடை?

தமிழ்ப் படங்களில் நடிக்க அஞ்சலிக்கு தடை?

523
0
SHARE
Ad

Anjali1சென்னை, ஜூன் 16 – “ஊர்சுற்றிப் புராணம்” என்ற படத்தில் நடிக்க மறுப்பதால், தமிழ்ப் படங்களில் நடிக்க அஞ்சலிக்கு தடை விதிக்க இயக்குநர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மு.களஞ்சியம் இயக்கும் படம் இந்த “ஊர்சுற்றிப் புராணம்”. அதில் சில தினங்கள் நடித்த பிறகு, அஞ்சலி தன் சித்தியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஹைதராபாத் கிளம்பிவிட்டார். சென்னைக்கே அவர் வரவில்லை. மேலும் தனது இந்த நிலைக்கு முக்கிய காரணம் மு.களஞ்சியம்தான்.

அவரும், தன் சித்தியும் திட்டமிட்டு தன் சொத்துக்களை அபகரிக்க முயற்சித்தனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார் அஞ்சலி. இன்னும் அஞ்சலிக்கு அவர் சொத்துக்களும் பல கோடி ரூபாயும் திரும்பக் கிடைக்கவே இல்லையாம்.

#TamilSchoolmychoice

வீடு, பணம் அனைத்தையும் இழந்து, ஹைதராபாதில் தஞ்சமடைந்திருக்கும் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டி வருகிறார் அஞ்சலி. தன் படத்தில் நடிக்கும் வரை அஞ்சலி சென்னையில் கால் வைக்கவே விடமாட்டேன் என்றும், வழக்குத் தொடருவேன் என்றும் அஞ்சலியை மிரட்டி வருகிறார் களஞ்சியம்.

ஆனால், களஞ்சியத்தின் மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். புதிய தமிழ்ப் படங்களில் நடிக்கத் தயார் என்று கடந்த வாரம் கூறியிருந்தார் அஞ்சலி. இந்த நிலையில், இயக்குநர் சங்கத்தை வைத்து அஞ்சலி மீது தடை கொண்டு வர களஞ்சியம் முயற்சி செய்தார்.

களஞ்சியம் சொன்னதைக் கேட்டு இயக்குநர் சங்கமும் அஞ்சலி மீது தடை விதிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. சங்கத்தின் தலைவர் விக்ரமன், நிர்வாகிகள் செல்வமணி உள்ளிட்டோர் களஞ்சியத்துக்கு ஆதரவாக இப்படியொரு முடிவை எடுத்துள்ளார்களாம்.