Home இந்தியா இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இன்று இந்தியா வருகை

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இன்று இந்தியா வருகை

689
0
SHARE
Ad

david-camelonமும்பை, பிப்.18- இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.

மும்பை வந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட்  கெமரூன் காலை‌யி‌ல் வர்த்தக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறுகையில், இந்தியா இங்கிலாந்து இடையேயான இருதரப்பு உறவுகள 2015ம் ஆண்டுக்குள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

டெல்லியில் நாளை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, கெமரூன் சந்திக்க உள்ளார். 

மேலும், இங்கிலாந்தில் தலைமையகம் கொண்டு இத்தாலியில் செயல்பட்டு வரும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தில் இருந்து முதற்கட்டமாக மூன்று ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள அவர், இதுகுறித்த விவரங்களைச் சேகரிக்கவும் திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளன.