நீதிமன்றம் இறுதி முடிவு செய்வதற்கு ஏதுவாக சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையினர் (ஜாயிஸ்) இவ்விவகாரத்தை அரசு தரப்பு வழக்குரைஞரின் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என சுல்தான் உத்தரவிட்டுள்ளதாக அவரின் தனிச் செயலாளர் முகம்மது முனிர் பானி அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
ஆனால், இவ்விவகாரத்தை சிவில் நீதிமன்றமா அல்லது ஷரியா நீதிமன்றத்துக்கு செல்வதா என்பதை ஆட்சியாளர் குறிப்பிடவில்லை.
கடந்த ஜனவரி 2 -ம் தேதி ஷா ஆலமில் உள்ள பிஎஸ்எம் அலுவலகத்தில் புகுந்த ஜாயிஸ் அதிகாரிகள், 321 மலாய் மொழி பைபிள்களையும் (அல்கிதாப்) இபான் பைபிள்களையும் (புப் கூடுஸ்) பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.