Home நாடு பைபிள் விவகாரம்: நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டு விட வேண்டும் – சிலாங்கூர் சுல்தான்

பைபிள் விவகாரம்: நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டு விட வேண்டும் – சிலாங்கூர் சுல்தான்

453
0
SHARE
Ad

JAIS-ALKitab-300x202கோலாலம்பூர், ஜூன் 20 – மலேசிய பைபிள் கழகத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 321 பைபிள்களைத் திருப்பிக் கொடுப்பதா அல்லது அழித்துவிடுவதா என்பதை நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் ஷராபுதின் இட்ரிஸ் ஷா கூறியுள்ளார்.

நீதிமன்றம் இறுதி முடிவு செய்வதற்கு ஏதுவாக சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையினர் (ஜாயிஸ்) இவ்விவகாரத்தை அரசு தரப்பு வழக்குரைஞரின் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என சுல்தான் உத்தரவிட்டுள்ளதாக அவரின் தனிச் செயலாளர் முகம்மது முனிர் பானி அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

ஆனால், இவ்விவகாரத்தை சிவில் நீதிமன்றமா அல்லது ஷரியா நீதிமன்றத்துக்கு செல்வதா என்பதை ஆட்சியாளர் குறிப்பிடவில்லை.

#TamilSchoolmychoice

கடந்த ஜனவரி 2 -ம் தேதி ஷா ஆலமில் உள்ள பிஎஸ்எம் அலுவலகத்தில் புகுந்த ஜாயிஸ் அதிகாரிகள், 321 மலாய் மொழி பைபிள்களையும் (அல்கிதாப்) இபான் பைபிள்களையும் (புப் கூடுஸ்) பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.