Home நாடு ஒரு தலைப்பட்ச மதமாற்றம் செல்லாது – கைரி ஜமாலுடின்

ஒரு தலைப்பட்ச மதமாற்றம் செல்லாது – கைரி ஜமாலுடின்

503
0
SHARE
Ad

khairyகோலாலம்பூர், ஜூன் 20 – கடந்த 2009 -ம் ஆண்டு, அமைச்சரவையில் செய்யப்பட்ட ஒருதலைபட்ச மதமாற்றமும் செல்லாது என்ற முடிவே இன்னமும் அமலில் உள்ளது என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறுகிறார்.

பராமரிப்பு விவகாரங்கள் தொடர்பில் இதுவே அன்றும் இன்றும் அமைச்சரவையின் நிலைப்பாடாகும். இவ்விஷயம் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. இவ்விஷயம் தொடர்பில் சட்டதுறை தலைவரின் கருத்துக்காக அமைச்சரவை காத்திருக்கிறது என்று கைரி தெரிவித்தார்.

“இடைக்காலத்தில் குறுகிய கருத்துகள் நிலவுகின்றன. அவற்றை பரிசீலிப்போம்” என்றும் கைரி மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

“பெற்றோரில் ஒருவரின் சம்மதத்துடன் பிள்ளைகளை இஸ்லாத்திற்கு மதம் மாற்றுவதை அனுமதிக்கும் நடப்புச் சட்டங்களைத் திருத்தும் திட்டம் எதையும் கொண்டிருக்கவில்லை” என்று கைரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருமணத்தின் போதான பெற்றோரின் அசல் சமயத்திற்கு மதிப்பும் முன்னுரிமையும் வழங்கும் விஷயத்தில் அப்போதும் இப்போதும் அமைச்சரவையின் நிலைப்பாடு ஒரே சீராக உள்ளது என்றும் கைரி குறிப்பிட்டார்.