Home நாடு சுரேந்திரன் மீண்டும் ஆறு மாத காலம் இடைநீக்கம்!

சுரேந்திரன் மீண்டும் ஆறு மாத காலம் இடைநீக்கம்!

560
0
SHARE
Ad

n-surendranகோலாலம்பூர், ஜூன் 20 – பிகேஆர் உதவித் தலைவரும் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.சுரேந்தின் மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் முலியாவை அவமதித்தற்காக சுரேந்திரன் 6 மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்கட்சியினர் “ரப்பர் முத்திரை” கோஷங்கள் எழுப்பி மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். சுரேந்திரனை தற்காலிக நீக்கம் செய்யும் தீர்மானத்தை பிரதமர்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஷாஹிடான் முன் மொழிந்தார். இந்தத் தீர்மானத்தின் சட்ட நிலை குறித்து மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

கடந்த நவம்பர் மாதத்தில் நீக்கம்செய்யப்பட்ட சுரேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நாடாளுமன்றத்திற்கு நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்திற்கு நுழைந்து சில நாட்களிலேயே மீண்டும் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.