ஜூன் 25 – அன்றாட சமைக்கும் உணவில் தவறாமல் சேர்க்கும் ஒரு பொருள் தான் தக்காளி. தக்காளியானது உணவிற்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி, உடலுக்கு பல நன்மைகளையும் அள்ளிக் கொடுக்கிறது.
அதிலும் இதன் விதைகளில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் தக்காளியானது உடலுக்கு நன்மைகளை தருவதுடன், சருமத்திற்கும் நன்மைகளை வாரி வழங்குகிறது.
எனவே விலை மலிவில் கிடைக்கும் இந்த தக்காளியை பலவாறு சமைத்து சாப்பிடுங்கள். இங்கு அந்த தக்காளியை உணவில் அன்றாடம் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் பார்ப்போம்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
தக்காளியில் வைட்டமின் சி வளமாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து வர உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.
சிறுநீரகக் கற்களை கரைக்கும்:
தக்காளியில் உள்ள நிக்கோட்டின் ஆசிட், பித்தக் கல் மற்றும் சிறுநீரக கற்களை கரைக்க உதவியாக இருக்கும்.
நீர்ச்சத்தை அதிகரிக்கும்:
தக்காளியை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், மிகவும் நல்லது. ஏனெனில் அவை உடலை வறட்சியடையாமல் பார்த்துக் கொள்ளும்.
செரிமானத்தை அதிகரிக்கும்:
தக்காளியை உட்கொண்டால், அவை எண்ணற்ற செரிமான நொதிகளை உற்பத்தி செய்து, உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைய உதவிப்புரியும்.
இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்:
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தக்காளியை சேர்த்து வந்தால், இரத்த அழுத்தத்தை சீராக வைக்கலாம். ஏனெனில் தங்ககாளியில் சோடியம் குறைவாக இருப்பதால், அவை இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவி புரிகிறது.
கண்களுக்கு நல்லது:
தக்காளியில் பீட்டா-கரோட்டின் அடங்கியுள்ளதால், இவை பார்வை கோளாறு ஏற்படுவதை தடுத்து, ஆரோக்கியமான பார்வையைக் கொடுக்கும்.
முகப்பருக்களை தடுக்கும்:
தக்காளியில் சருமத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தி உள்ளது. எனவே தினமும் இதன் சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், பருக்கள் வருவது குறைவதுடன், அதனால் ஏற்படும் தழும்புகளையும் தடுக்கலாம்.
கொழுப்பைக் குறைக்கும்:
தக்காளிக்கு உடலில் உள்ள கொழுப்புக்களை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது. மேலும் இது உடலில் நல்ல கொழுப்புக்கள் மற்றும் கெட்ட கொழுப்புக்களை சீராக பராமரிக்கும்.