Home நாடு எம்எச்370 விவகாரம் மிகவும் சவாலான பணி – புதிய போக்குவரத்து அமைச்சர் கருத்து!

எம்எச்370 விவகாரம் மிகவும் சவாலான பணி – புதிய போக்குவரத்து அமைச்சர் கருத்து!

424
0
SHARE
Ad

liow-tiong-lai5-june7_400_267_100புத்ராஜெயா, ஜூன் 26 – காணாமல் போன எம்எச்370 விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணி தான் தனக்கு இருக்கும் முக்கிய சவால் என்று புதிதாக நியமிக்கப்பட்ட போக்குவரத்து துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் நேற்று அமைச்சராக பதவியேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சை கடந்த ஓராண்டுகாலமாக டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் தற்காலிகமாக கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று பிரதமர் நஜிப் துன் ரசாக் அமைச்சரவை மாற்றங்களை அறிவித்தார்.

அதில் மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் போக்குவரத்து துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டப் பின் லியாவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த மார்ச் 8ஆம் தேதி பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட எம்எச்370 விமானம் வியட்நாம் வான்வெளியில் தனது ராடார் தொடர்பில் இருந்து மறைந்தது. விமானம் காணமல் போய் 3 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் விமானத்தின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அதை கண்டுபிடிக்கும் பணிக்கு இனி நான் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது. இது மிகவும் சவாலான ஒரு பணி” என்று லியோவ் தெரிவித்தார்.