Home நாடு வீடற்றவர்களை காண வீதியில் இறங்கினார் பிரதமர் நஜிப்!

வீடற்றவர்களை காண வீதியில் இறங்கினார் பிரதமர் நஜிப்!

543
0
SHARE
Ad

Najib

கோலாலம்பூர், ஜூலை 10 – தலைநகரில், வீடற்றவர்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் தங்குமிடம் இன்னும் ஆறு மாதங்களுக்குள் தயாராகிவிடும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் உறுதியளித்துள்ளார்.

வீடற்ற இவர்கள் தங்கள் உடைமைகளை வைப்பதற்கான பாதுகாப்பு பெட்டகம் மற்றும் கழிவறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்  என்றும் நஜிப் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இந்த நிலை தொடரக்கூடாது. இவர்களுக்கு இருப்பிடம் இல்லாத காரணத்தால் தான் இவ்வாறு தெருக்களில் உறங்குகின்றனர்” என்று ஜாலான் துன் பேராக்கில் அமைந்துள்ள ‘சூப் கிச்சன்’ எனும் உணவகத்தில் நேற்று நஜிப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வீடற்றவர்களுக்கு தேவையான உணவுகளையும் மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்த சூப் கிச்சன் தொண்டர்களுக்கு அரசாங்கத்தின் சார்பாக பிரதமர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

சுமார் இரவு 10.40 மணியளவில் ஜாலான் துன் பேராவை வந்தடைந்த பிரதமர், சஹாயா சூரியா எனும் கட்டிடத்தை வலம் வரும் முன்பு, வீடற்றவர்களுக்கு சூப் சமையலறை தொண்டர்கள் வழங்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை கவனிக்க  சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டார்.

வீடற்றவர்கள்  மற்றும் பிச்சைக்காரர்கள் பெரும்பாலோர் வயதானவர்கள் என்பதால், அவர்களுக்கு, கோழி, சோறு, மருந்து பானங்கள், சூடான காப்பி போன்ற உணவு வகைகள் வழங்கப்படுகின்றது.

புக்கிட் பிந்தாங்கிலிருந்து இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள வீடற்றவர்களுக்கு சூப் கிச்சன் உறுப்பினர்களால் வழங்கப்பட்டு வந்த உணவு விநியோகத்தை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் தடை செய்ததன் காரணத்தால் இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

எனினும், தெங்கு அட்னான் பொது மக்களின் கண்டனங்களை கருத்தில் கொண்டு , வரும் ஆகஸ்ட் 16 வரை சூப் கிச்சன் மூலமாக உணவு வழங்குவது செயல்படலாம் என்று கடந்த செவ்வாய் அன்று தெரிவித்தார்.

வீதியில் இறங்கி நடந்த பிரதமர், அங்குள்ள பலரை சந்தித்து அவர்கள் இவ்வாறு இருப்பதன் காரணத்தை அறிந்துக் கொண்டார்.

அதில் முன்னாள் கார் விற்பனையாளரான டான் யேப் ஹெங் (வயது 70) கூறியதாவது:-

தான் கடந்த 20 ஆண்டுகளாக வீடு இல்லாத நிலையிலும், தன்னை யாரும் கவனிக்காத நிலையிலும் இருப்பதால் இவ்வாறு தெருவில் உறங்குவதாக பிரதமரிடம் கூறினார்.

மேலும் பிரதமர், ஜாலான் சீலாங் நடைபாதையில் ஒரு பிளாஸ்டிக் விரிப்பில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு தந்தையும், அவரது இரண்டு வயது மகனையும் நலம் விசாரித்தார்.