Home அவசியம் படிக்க வேண்டியவை எம்எச்370, எம்எச்17 இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய குடும்பம்!

எம்எச்370, எம்எச்17 இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய குடும்பம்!

511
0
SHARE
Ad

MH17 -australiaசிட்னி, ஜூலை 21 – மாஸ் விமானத்தின் இரு விபத்துகளிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அனைவரையும் சோகக் கடலில் ஆழ்த்தி உள்ளது.

உலக அளவில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய மலேசியாவின் மாஸ் விமானம் எம்எச் 370-ன் பேரிடர் ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில், கடந்த வியாழன் அன்று கிழக்கு உக்ரைனில் போராட்டக் குழுக்குகளால் எம்எச் 17 விமானம் வீழ்த்தப்பட்டது, ஒட்டு மொத்த மலேசியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது.

இந்த இரு பேரிடர்களிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டு இருப்பது, உலக அளவில் அந்த குடுபத்தின் மீது கவனத்தையும், அனுதாபத்தயும் ஏற்படுத்தி உள்ளது.

#TamilSchoolmychoice

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேரி மற்றும் ஆல்பர்ட் ரிஸ்க் தம்பதிகள் ஐரோப்பாவில் ஒரு மாத விடுமுறையை கழித்து விட்டு மீண்டும் தங்கள் நாட்டிற்கு எம்எச் 17 விமானம் மூலம் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் யாரும் எதிர்பாரா வண்ணம் விமானம் உக்ரைன் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை கொண்டு தாக்கி வீழ்த்தப்பட்டது. 298 பேரை பலிவாங்கிய இந்த தாக்குதலில், மேரி மற்றும் ஆல்பர்ட் ஆகிய இருவரும் அடங்குவர் என்பது மிகுந்த துயரமான செய்தியாகும்.

கடந்த மார்ச் 8-ம் தேதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கி சென்ற போது, மாயமான எம்எச் 370 விமானத்தில், மேரியின் தாயார் வழிச் சொந்தமான ரோட்னி மற்றும் அவரது மனைவி மேரி பர்ரோஸ், ஆகியோர்  பயணித்தது குறிப்பிடத்தக்கது.

அந்த சோகத்திலிருந்தே மீள்வதற்கு வழி தெரியாமல் தவித்த நிலையில், மேரியின் குடும்பம் தற்போது மேரியையும், அவரது கணவரையும் விபத்தில் இழந்திருப்பது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர்கள் உறவினர் கூறுகையில், “மலேசிய ஏர்லைன்ஸ்-ன் இரு விபத்துகளிலும் எங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து என்ன கூறுவதென்று எங்களுக்கு தெரியவில்லை. இந்த விபத்துகள் யாரும் எதிர்பாராமல் நடந்தவை. இதில் மாஸ் நிறுவனம் பற்றி குறை கூற ஒன்றும் இல்லை” என்று கூறியுள்ளார்.