Home நாடு எம்எச்17: வானில் இருந்து சிதறி விழும் கருகிய உடல்கள் – பதைபதைக்க வைக்கும் புதிய காணொளி

எம்எச்17: வானில் இருந்து சிதறி விழும் கருகிய உடல்கள் – பதைபதைக்க வைக்கும் புதிய காணொளி

867
0
SHARE
Ad

emergency-worker-mh17கோலாலம்பூர், ஜூலை 21 – மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்டவுடன் அது கீழே விழும் காட்சியை ஒரு தம்பதியர் காணொளியாக பதிவு செய்துள்ளனர். அந்தக் காணொளிப் பதிவு தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏவுகணையால் தாக்கப்பட்ட எம்எச் 17 விமானம் நெருப்புக் குழம்பாக கீழே விழுவது, விமானப் பயணிகளின் கருகிய உடல் பாகங்கள் பறந்து வந்து தரையில் விழுவது என்று அந்தக் காணொளிப் பதிவில் உள்ள காட்சிகள் பார்ப்பவர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

ஜெர்மனியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் இதை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.விமானம் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டவுடன் அது கீழே விழுந்ததை அந்த வழியாக காரில் சென்ற தம்பதியர் தங்களது செல்லிடப்பேசியில் பதிவு செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

கை, கால்கள் என்று மனித உடல் பாகங்களும், பயணிகளின் கருகிய உடல்களும் விமானத்தில் இருந்து பறந்து வந்து தரையில் விழுந்த காட்சி அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது.

விமானம் சிதறிப் போவதையும், அதன் பாகங்களும் பயணிகளும் கீழே விழும் காட்சியையும் கவனித்தபடியே திறன்பேசியில் பதிவு செய்யும் அப்பெண்மணி பீதியில் மெல்ல அழத் தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அவர் பெரிதாக அழுவதைக் கேட்க முடிகிறது.

மலேசிய விமானம் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டு தரையில் விழுந்ததும் அந்த இடத்தில் ரஷ்ய போராளிகள் கருப்புப் பெட்டியை தேடியபோது எடுத்த காணொளிப்பதிவு கடந்த 17ஆம் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது நெஞ்சை உருக்கும் புதிய காணொளி வெளியாகியுள்ளது.

இந்தத் தகவல் http://www.rt.com/news/310230-mh17-crash-new-video/ என்ற இணையத்தளத்தில் காணொளியுடன் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அந்தக் காணொளியின் உண்மைத் தன்மையை இன்னும் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யூடியூபில் வெளியிடப்பட்டுள்ள அந்தக் காணொளி: