Home இந்தியா மும்பை விமானக் கட்டுப்பாட்டுக் கோபுரத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கும் அபாயம்!

மும்பை விமானக் கட்டுப்பாட்டுக் கோபுரத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கும் அபாயம்!

482
0
SHARE
Ad

mumbai-airportமும்பை, ஜூலை 21- மும்பை உள்நாட்டு விமான நிலையம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களால், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு வெடிகுண்டு அபாயம் ஏற்பட்டுள்ளதாக,மும்பை பன்னாட்டு விமான நிலைய நிறுவனத்தை இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரித்துள்ளது.

மும்பை உள்ளூர் விமான நிலையத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் அருகில் டாக்சி, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களால் கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக,விஸ்வாஸ் பம்பூர்க்கர் என்பவர் தகவல் அறியும் சட்டத்தில் தாக்கல் செய்த மனுவால் இது தெரிய வந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

பம்பூர்க்கரின் மனுவுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தின் பாதுகாப்புப் பிரிவின் இணைப் பொது மேலாளர் எஸ்.கே. மாலிக் பதிலளித்துக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஜூலை 3-ஆம் தேதியிட்டு மாலிக் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது; கடந்த ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி விமான நிலையத்தில் சோதனை நடத்தப்பட்ட போது, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரத்தின் பாதுகாப்புச் சுவருக்கு அருகே வாகனம் நிறுத்தி வைக்கும் பகுதி இருந்தது தெரியவந்தது.

பாதுகாப்புச் சுவருக்கு அருகில் இதுபோன்று வாகனங்கள் நிறுத்தி வைத்திருப்பது கோபுரத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும்.

வெளிச்சுவரில் இருந்து குறைந்த பட்சம் 100 மீட்டர் தொலைவில் தான் வானங்கள் நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்பது பாதுகாப்பு விதியாகும்.

தற்போது இருக்கும் சூழலில் தேசவிரோத சக்திகள் எந்த நேரத்திலும் அப்பகுதிக்குள் புகுந்து அங்கு நிறுத்தியுள்ள வானங்களில் வெடிகுண்டுகள் வைத்து எளிதில் தாக்குதல் நடத்த முடியும்.

அந்தப் பகுதியில் சுமார் 4,000 க்கும் அதிகமான வானங்கள் பார்க்கிங் செய்யப்படுகின்றன. அதைக் கட்டுப்படுத்தி கோபுரத்தின் முழுப் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கும்படி எம்.ஐ.ஏ.எல். அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

அதன்படி அவர், எம்.ஐ.ஏ.எல். அதிகாரிகளுக்கு இது தொடர்பான எச்சரிக்கைக் கடிதம் ஒன்றையும் அனுப்பி உள்ளார்.

அதற்கு எம்.ஐ.ஏ.எல். அதிகாரிகள்,”மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் சோதனை செய்து, அனுமதிச்சீட்டு வழங்கிய பின்னரே வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படுகின்றன. தனியார்ப் பாதுகாப்பு அதிகாரிகளும் முறைப்படி சோதனை செய்கின்றனர்” எனப் பதிலளித்துள்ளனர்.