Home நாடு சிங்கப்பூர் மாதிரி நாடாளுமன்றம்: முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்கிறார் பிரேமிகா!

சிங்கப்பூர் மாதிரி நாடாளுமன்றம்: முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்கிறார் பிரேமிகா!

646
0
SHARE
Ad

Premikhaகோலாலம்பூர், ஜூலை 21 – சிங்கப்பூர் மாதிரி நாடாளுமன்ற அமைப்பில், முதல் பெண் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) யோங் லூ லின் மருத்துவப் பள்ளியில் அடுத்த மாதம் முதல் தனது படிப்பை மேற்கொள்ளவுள்ள எம்.பிரேமிகா (வயது 20), வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள 4வது மாதிரி நாடாளுமன்ற அமைப்பில் (Singapore Model Parliament) பிரதமர் பொறுப்பை ஏற்கின்றார்.

இது குறித்து என்யுஎஸ் அரசியல் அறிவியல் சமுதாயத்தின் தலைவரும், மாதிரி நாடாளுமன்றத்தின் இணை ஒருங்கிணைப்பாளருமான கிரிஸ் சியா (வயது 24) கூறுகையில், இந்தப் பொறுப்பை வகிக்க மூன்று பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற தகவலை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

மேலும், “பிரேமிகா தனது அமர்வு உறுப்பினர்களின் திறன்களை மதிப்பிடுவதை தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளார். அதே வேளையில், தலைமைத்துவ தகுதிகளையும் நன்கு வெளிப்படுகின்றார்” என்றும் கிரிஸ் சியா தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு வரும் வியாழக்கிழமை சிங்கப்பூரில் ‘த ஆர்ட் ஹவுஸ்’-ல் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. அதில் மத்திய சேம நல நிதி சட்டதிருத்தம் தொடங்கி, மனிதக் கடத்தல் பாதுகாப்பு சட்டவரைவு வரை அனைத்தும் விவாதிக்கப்படவுள்ளது.

இந்த மாதிரி நாடாளுமன்றத்தில், 72 பேச்சாளர்கள் வெவ்வேறு பிரிவுகளில் விவாதிக்கவுள்ளனர். அதில் எதிர் அணியின் பங்களிப்பும் உண்டு.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் சபாநாயகரான ஹாலிமா யாக்கோப், இந்த மாதிரி நாடாளுமன்ற அமைப்பை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கின்றார்.

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த நாடாளுமன்றத்தின் முக்கியப் பங்களிப்பையும் அதன் பொறுப்பையும் பற்றி இளைஞர்களுக்கு இந்த நிகழ்வு தெளிவாகப் புரிய வைக்கும் என்றும் ஹாலிமா குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் தான் ஒரு சமுதாயத் தலைவராக ஆக வேண்டுமா? அல்லது அரசியல் தலைவராக ஆக வேண்டுமா என்பது குறித்து தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், ஆனால் நாட்டில் பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்பதை தான் நம்புவதாகவும் பிரேமிகா தெரிவித்துள்ளார்.