Home இந்தியா அறிவுசார் குழந்தையை வளர்க்க, பெற்றோர் புத்தகம் படிக்க வேண்டும்: அப்துல்கலாம் அறிவுரை!  

அறிவுசார் குழந்தையை வளர்க்க, பெற்றோர் புத்தகம் படிக்க வேண்டும்: அப்துல்கலாம் அறிவுரை!  

511
0
SHARE
Ad

APJ-Abdul-Kalam1மதுரை, ஜூலை 21- அறிவு சார் சமூகத்தை உருவாக்கப் பெற்றோர் தொலைக்காட்சி பார்ப்பதைக் குறைத்து விட்டுக் குழந்தைகளுடன் சேர்ந்து புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று முன்னாள் அதிபர் அப்துல்கலாம் கூறியுள்ளார்.

தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்கத்தின் 90-ஆவது ஆண்டு நிறைவு விழாவில் முன்னாள் அதிபர் அப்துல்கலாம், கலந்து கொண்டு பேசினார். பேச்சினிடையே அவர் குறிப்பிட்டது யாதெனில்:

“அரவக்குறிச்சியில் தனது ஆசிரியர் பெயரில் ஒருவர் பள்ளி தொடங்கியுள்ளார். இது போன்று ஆசிரியர் பெயரில் ஒருவர் பள்ளி தொடங்கி இருப்பதை நான் பார்த்தது இல்லை. அந்தப் பள்ளிக்குச் சென்று வந்த நான், அதை நினைத்துப் பெருமை அடைகிறேன். அதற்கு, அவருக்கு அறிவை ஊட்டிய ஆசிரியர்களும் பெற்றோர்களும் தான் காரணம்.

#TamilSchoolmychoice

ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர் குறந்தது ஒரு மணி நேரமாவது தொலைக்காட்சி பார்ப்பதைக் குறைத்து விட்டு, அந்த நேரத்தில் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து புத்தகத்தைப் படிக்க வேண்டும். அப்போது தான் நமது குழந்தைகள் அறிவு சார் குழந்தைகளாக வருவார்கள்.

பெற்றோராலும் ஆசிரியராலும் தான் அறிவு சார் சமூகத்தை உருவாக்க முடியும். ஆகவே, குழந்தைகளின் நலனுக்காகப் பெற்றோர் புத்தகம் படித்து, அதிலுள்ள கருத்துகளைக் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வது அவசியம்.

அறிவுள்ள குழந்தைகளாக வளர்ந்து இளைஞர்களாகி, இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களாக மாறினால் மட்டுமே ஏற்ற தாழ்வற்ற சிறந்த நாடாக இந்தியா மாறும்.

நீடித்த வளர்ச்சிக்குத் தலைமைப் பண்பு மிகவும் அவசியம். எனவே, இளைஞர்கள் தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.