Home இந்தியா உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம் மோடியை சந்திக்கிறார்!

உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம் மோடியை சந்திக்கிறார்!

566
0
SHARE
Ad

Jim-Yong-Kimபுதுடெல்லி, ஜூலை 21 – உலக வங்கி நிதி உதவியுடன் நடைபெறும் வளர்ச்சிப்  பணிகள் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உலக  வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம் 3 நாள் பயணமாக இன்று டெல்லி  வருகிறார்.

தனது 3 நாள் பயணத்தின் போது தமிழகத்திற்கும் கிம்  வருகிறார். உலக வங்கி நிதி உதவியுடன் தமிழகத்தில் நடைபெறும்  பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய இருக்கிறார்.

கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூன் வரையில்  இந்தியாவிற்கு உலக வங்கி 6.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு  நிதி உதவி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.