Home கலை உலகம் பிரிக்ஸ் சர்வதேச விழாவில் மஞ்சப்பை!

பிரிக்ஸ் சர்வதேச விழாவில் மஞ்சப்பை!

514
0
SHARE
Ad

manjapaiசென்னை, ஜூலை 21 – பிரிக்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட மஞ்சப்பை தமிழ்ப்படம் தேர்வாகியுள்ளது. விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் மஞ்சப்பை.

தாத்தா, பேரன் பாசத்தை மையமாக கொண்டு உருவான இப்படத்தை ராகவன் இயக்கியிருந்தார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் நல்ல வசூலைப் பெற்றது.

manjappaiஇப்போது, விருதுகளையும் குவிக்க ஆரம்பித்துள்ளது. முதல் கட்டமாக வருகிற 22-ஆம் தேதி சென்னை ரஷ்யன் கலாச்சாரத்தில் நடைபெறும் பிரிக்ஸ் எனும் உலக திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்படுகிறது.

#TamilSchoolmychoice

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்ததுதான் இந்த பிரிக்ஸ் (BRICS). இந்த விழாவில் பல்வேறு நாடுகளின் படங்கள் திரையிடப்பட உள்ளன. ஆனால், தமிழ் மொழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே படம் ‘மஞ்சப்பை’ என்பது குறிப்பிடத்தக்கது.