கோலாலம்பூர் – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு உக்ரைன் அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்17 -ல் மரணமடைந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குகிறது மலேசியா ஏர்லைன்ஸ்.
டச்சு தேசிய ஒளிபரப்பு நிறுவனமான என்ஓஎஸ் வெளியிட்டுள்ள செய்தியில், டச்சுப் பயணிகளின் குடும்பத்தினர் சார்பாக வழக்கறிஞர் வீரு மேவா பிரதிநிதிப்பதாகத் தெரிவித்துள்ளது.
மலேசியா ஏர்லைன்ஸ், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 130,000 யூரோ (145,000 அமெரிக்க டாலர்) இழப்பீடு வழங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
298 பேர் மரணமடைந்த அந்தப் பேரிடரில், பயணிகளில் பெரும்பாலானவர்கள் டச்சுக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.