Home Featured கலையுலகம் கார்பரேட் நிறுவனங்களிலும் ‘கபாலி’ கொண்டாட்டம்!

கார்பரேட் நிறுவனங்களிலும் ‘கபாலி’ கொண்டாட்டம்!

550
0
SHARE
Ad

rajini kabaliசென்னை – வரும் வியாழக்கிழமை சூப்பர் ஸ்டாரின் ‘கபாலி’, உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட நெருப்பாகக் கொதித்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் எப்படியும் பல சாக்குப் போக்குகளைச் சொல்லி விடுமுறை எடுக்கத் தான் போகிறார்கள்.

இதனைக் கருத்தில் கொண்ட சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, அன்றைய நாளில் விடுமுறையும் அளித்து, ஊழியர்களுக்கு இலவசமாக கபாலி டிக்கெட்டுகளையும் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice