Home Featured வணிகம் ஏர்ஆசியா சலுகை விலை அறிவிப்பு – 8 ரிங்கிட்டில் இருந்து தொடக்கம்!

ஏர்ஆசியா சலுகை விலை அறிவிப்பு – 8 ரிங்கிட்டில் இருந்து தொடக்கம்!

839
0
SHARE
Ad

AirAsia_கோலாலம்பூர் – உலகின் சிறந்த மலிவு விலை விமான நிறுவனம் மற்றும் ஆசியாவின் சிறப்பு மலிவு விலை விமான நிறுவனம் என்ற இரண்டு பிரிவுகளில் ஸ்கைடிராக்ஸ் விருதை வென்ற ஏர் ஆசியா நிறுவனம், இந்தச் சாதனையைக் கொண்டாடும் வகையில் பல சலுகை விலைகளை அறிமுகம் செய்துள்ளது.

இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, 8 ரிங்கிட்  இருந்து 198 ரிங்கிட் வரையில், சலுகை விலையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன.

ஹாங்காங், சிங்கப்பூர், புக்கெட், சியாம் ரியாப், பெக்கான்பாரு, ஹோ சி மின் சிட்டி ஆகிய இடங்களுக்கு இந்த சலுகை விலை அறிமுகமாகியுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், ஷாங்காய், பெர்த், ஆக்லாந்து, தெஹெரான் மற்றும் மொரீசியஸ் ஆகிய இடங்களுக்கும் குறைந்த விலைக் கட்டணமாக 198 ரிங்கிட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஏர் ஆசியா அறிவித்துள்ளது.

இந்தப் முன்பதிவுகளுக்கான பயணக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 4 முதல் ஆகஸ்ட் 21 வரையில் ஆகும்.