Home வாழ் நலம் மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் எலுமிச்சை!

மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் எலுமிச்சை!

1172
0
SHARE
Ad

lemonஜூலை 24 – எலுமிச்சையில் 84.6 நீர்ச்சத்து இருக்கிறது. வெயில் காலங்களில் தாகத்தைத் தணிக்க இது உதவுகிறது, என்றுதான் நமக்கு தெரியும். ஆனால் எலுமிச்சைக்கு மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் சக்தி உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எலுமிச்சையின் பயன்கள்:

* எலுமிச்சைச் சாற்றை குடித்து வருவதால் மலேரியா, காலரா போன்ற நோயின் வீரியம் குறையும்.

#TamilSchoolmychoice

* முடக்குவாத நோயை சரி செய்யவும், எலும்பு தேய்மான பிரச்சனை இருப்பவர்களின் நோய் தீவிரத்தைக் குறைக்கவும் எலுமிச்சையிலுள்ள வைட்டமின் சி சத்து உதவுகிறது.
lemon1* வாயில் எச்சில் ஊறுதல், நெஞ்செரிச்சல், செரிமானமின்மை, வாய்க்கசப்பு உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட பூரண குணம் கிடைக்கும்.

* பித்தம், வாய்க் கசப்பால் சாப்பாடு பிடிக்காமல் அவதிப்படுபவர்கள் எலுமிச்சை இலையை சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சட்டென்று நலம் பெறுவார்கள்.

Lemon-Juice* சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும். எலுமிச்சையில் தண்ணீர் சேர்த்துக் குடிப்பது தாகத்தைக் கட்டுப்படுத்தும்.

* மூல வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் இந்துப்பு (மலை உப்பு) தூவி வாயில் அடக்கிக் கொண்டால், விரைவில் குணமடைவார்கள்.

Lemon Juice* மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எலுமிச்சை சாற்றை கொடுத்தால் சோர்வில்லாமல் இருப்பார்கள்.

* பசும்பாலில் ஒரு துளி எலுமிச்சைச் சாறை கலந்து குடித்து வர ரத்த மூல நோய் சரியாகும். எலுமிச்சைச் சாற்றை தண்ணீர் கலக்காமல் குடிக்கக்கூடாது. குடித்தால் பல் பாதிப்படையும்.