நெதர்லாந்து, ஜூலை 24 – கடந்த ஜூலை 17 -ம் தேதி, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை தாக்குதல் நடத்தி வீழ்த்தப்பட்ட எம்எச்17 விமானப் பேரிடரில் பலியான 154 டச்சு பயணிகளின் சடலங்கள் அவர்களது சொந்த நாட்டிற்கு இராணுவ விமானத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
நெதர்லாந்தில் மருத்துவப் பரிசோதனைகள் முடிந்த பின்னர் பயணிகளின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
(பயணிகளின் சடலங்களை கொண்டு வந்த விமானத்தின் முன் நெதர்லாந்து இராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்துகின்றனர்)
நெதர்லாந்து இராணுவ விமானத்தில் கொண்டு வரப்பட்ட டச்சுப் பயணிகளின் சடலங்கள் வைக்கப்பட்ட சவப்பெட்டிகள் விமானத்தில் இருந்து காருக்கு மாற்றப்படுகின்றன.
(ஒவ்வொரு சவப்பெட்டியும் ஒவ்வொரு கார் மூலமாக முழு மரியாதையுடன் கொண்டு செல்லப்படுகின்றன)
(சவப்பெட்டிகளை கொண்டு செல்வதற்கென்றே பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட சாலையில் கார்கள் விரைந்து செல்கின்றன)
(பாலம் ஒன்றின் மீது நின்று கொண்டு அக்கார்கள் செல்வதை பொதுமக்கள் வேடிக்கை பார்க்கின்றனர். அதில் ஒரு சிலர் அக்கார்களின் மீது மலர்களை தூவுகின்றனர்)
(ஆம்ஸ்டெர்டாமில் உள்ள டாம் சுகொயர் என்ற இடத்தில் நடைபெற்ற அமைதிப் பிரார்த்தனையில் மக்கள் ஒன்று கூடி விமான விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்)
படங்கள்: EPA