Home நாடு கறுப்புப் பெட்டிகளின் மூலம் ஏவுகணைத் தாக்குதல் உறுதியானது – 11 நாடுகள் சட்ட நடவடிக்கை

கறுப்புப் பெட்டிகளின் மூலம் ஏவுகணைத் தாக்குதல் உறுதியானது – 11 நாடுகள் சட்ட நடவடிக்கை

477
0
SHARE
Ad

emergency-worker-mh17கோலாலம்பூர், ஜூலை 29 – எம்எச் 17 விமானம் விழுந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ள இரண்டு கறுப்புப் பெட்டிகளின் மூலம் அந்த விமானம் ஏவுகணைத் தாக்குதல் மூலமாகத்தான் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த விமானப் பேரிடரில் சம்பந்தப்பட11 நாடுகள் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்ட ஆரம்பித்துள்ளன.

கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) டான்ஸ்ரீ கனி பட்டேல், மலேசியக் காவல் துறையினர் விசாரணைகளைத் தொடக்கியுள்ளதாகவும், மலேசிய விமானத்திற்கு எதிராக நிகழ்ந்த அநியாயத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த சட்ட நடவடிக்கைகளில் ஏனைய 11 நாடுகளும் இணைந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Gani-Patel-AG---Featureகுற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு மலேசியா முன் நின்று பணியாற்றும் எனவும் கனி பட்டேல் (படம்) கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்காக ‘யூரோஜஸ்ட்’ (Eurojust) என்ற அமைப்பின் உதவிகள் பெறப்படும். குற்றவியல் (கிரிமினல்) விவகாரங்களில், ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் நீதிமன்ற விவகாரங்களைக் கையாளும் அதிகாரபூர்வ அமைப்பாக இந்த அமைப்பு திகழ்கின்றது.

சம்பந்தப்பட்ட 11 நாடுகளும் தங்களின் சொந்த விசாரணை நடத்தி அதன் மீதிலான முடிவுகளை யூரோஜஸ்ட் அமைப்பிடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் மலேசியாவுக்குச் சொந்தமானது என்பதால் குற்றவாளிகளை மலேசிய சட்டங்களுக்கேற்ப நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கனி பட்டேல் தெரிவித்துள்ளார்.