உலகம் முழுவதும் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. நம் முன்னோர்களின் உணவில் உருளைக் கிழங்கு இருந்திருக்கிறது. உலகத்தில் பஞ்சம், பசி ஏற்பட்டபோதெல்லாம் கை கொடுக்கும் தெய்வமாக இருந்து உருளைக்கிழங்கு காப்பாற்றி இருக்கிறது.
100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 கிராம் ஆகும். இதில் புரதம் 16 சதவீதம் உள்ளது. பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ.பி.சி. ஆகியவையும் போதிய அளவில் உள்ளன.
வயதானவர்களுக்கு தேவையான புரதம், மாவுப்பொருட்கள், சர்க்கரை, சுண்ணாம்பு சத்து, பொட்டாசியம் போன்ற அனைத்தும் உருளைக்கிழங்கில் கிடைத்து விடுகிறது. உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிட்டால்தான் சத்துக்கள் கிடைப்பதுடன், எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
அதற்காக நாம் அதை சாப்பிடாமல் இருக்கிறோமா? சாப்பிடுகிறோம். எனவே உருளைக்கிழங்கை அளவோடு சாப்பிட்டு உடற்பயிற்சி செய்யுங்கள். உங்களுடைய எடைகூடாது. அதனால், எந்த பயமும் இல்லாமல் உருளை கிழங்கை சாப்பிட்டு சந்தோஷமாக வாழுங்கள்.