இந்த பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல் வரிகள் எழுதியுள்ளார். நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு பிரபல நடன இயக்குநர் ராஜூ சுந்தரம் நடனம் அமைத்துள்ளார்.“காரத்தில் காரத்தில் சில்லி இவ” என்று தொடங்கும் இந்த பாடல் நிச்சயம் பட்டி தொட்டி எங்கும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த படத்திற்காக பிரஷாந்த் தனது உடல் எடையைக் குறைத்து புதிய பொலிவுடன் பார்ப்பதற்கு கூடுதல் இளமையாக இருக்கின்றார். அவரது புகைப்படங்கள் பேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்களில் பிரஷாந்த் ரசிகர்களால் மிகவும் விரும்பி பகிரப்பட்டு வருகின்றது.
நடிகர் தியாகராஜன் தயாரிப்பில், அருண்ராஜ் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சாஹசம்’ படத்தில் பிரஷாந்துடன், நாசர், துளசி, தேவதர்ஷினி, தம்பி இராமையா, லீமா, எம்எஸ் பாஸ்கர், அபிசரவணன், ஜான்விஜய், மலேசியாவைச் சேர்ந்த அபிதா, ஹேமா அகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்திப்பட உலகில் மிகவும் பிரபலமானவரான நர்கீஸ் பக்ரி, ரன்பீர் கபூருடன் ‘ராக் ஸ்டார்’, ஜான் ஆப்ரஹாமுடன் ‘மெட்ராஸ் கபே’, ஷாகித் கபூருடன் ‘படா போஸ்டர் நிக்லா ஹீரோ’, வருண் தவானுடன் ‘மே தேரா’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது ‘ஸ்பை’ என்ற ஹாலிவுட் படத்திலும் நர்கீஸ் நடித்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள்: ‘சாஹசம்’ அதிகாரப்பூர்வ முகநூல்