Home உலகம் இபோலாவுக்கான மாற்று மருந்தினை ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்க ஒபாமா மறுப்பு!

இபோலாவுக்கான மாற்று மருந்தினை ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்க ஒபாமா மறுப்பு!

478
0
SHARE
Ad

Barack Obamaஅபுஜா, ஆகஸ்ட் 11 – மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உயிர்கொல்லியாக பரவி வரும் இபோலா காய்ச்சலுக்கான மாற்று மருந்தினை நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா தர மறுத்து விட்டதாக தகவல்கள் வருகின்றன.

ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, சியானா, சையர் லியோன் ஆகிய நாடுகளில் அதிபயங்கரமாக பரவி வரும் இபோலா நோயினை உலக சுகாதார அமைப்பும் உலகின் உயிர் கொல்லியாக சமீபத்தில் அறிவித்து இருந்தது. இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு பலியாகி உள்ள நிலையில், காய்ச்சல் அறிகுறிகளுடன் ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க ஆராய்ச்சி கூடங்களில் இபோலா நோய்க்கான ஆரம்பநிலை மாற்று மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இபோலாவால் பாதிக்கப்பட்டிருந்த இரு அமெரிக்க மருத்துவர்களுக்கு சோதனை முயற்சியாக அந்த மருந்து அளிக்கப்பட்டு அது வெற்றி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

‘ஸ்மேப்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த மருந்தினை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு, நைஜீரிய அரசு வேண்டுகோள் விடுத்ததாகவும், அதனை அதிபர் ஒபாமா மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆரம்பக்கட்ட ஆராய்ச்சியில் இருக்கும் ஒரு மருந்தினை மாற்று மருந்தாக வழங்க முடியாது என்று ஒபாமா கூறிவிட்டார் என நைஜீரியா ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.