Home தொழில் நுட்பம் நோக்கியாவின் 130 ரக செல்பேசிகளை வெளியிட்டது மைக்ரோசாஃப்ட்!

நோக்கியாவின் 130 ரக செல்பேசிகளை வெளியிட்டது மைக்ரோசாஃப்ட்!

490
0
SHARE
Ad

nokia130கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதன் தொழில்நுட்பமும், தயாரிப்புகளின் விலையும் தான். இந்நிலையில், நடுத்தர மக்களுடனான தொழில்நுட்ப தொடர்பு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு பெரும்பாலும் கிடைக்காமலேயே சென்று கொண்டிருக்கிறது.

இந்த இடைவெளியை சரி  செய்யவும், நடுத்தர வர்க்க மக்களுக்கான செல்பேசிகளை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்த மைக்ரோசாஃப்ட், நோக்கியா நிறுவனத்துடன் சேர்ந்து நோக்கியா 130 ரக செல்பேசிகளை நேற்று வெளியிட்டுள்ளது.

ஒரு அடிப்படை செல்பேசிகளுக்கு உண்டான அத்தனை அம்சங்களும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செல்பேசிகளின் விலை சுமார் 25 அமெரிக்க டாலர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திறன்பேசிகளைப் பயன்படுத்துவோர் கட்டாயம் இந்த அடிப்படை அம்சங்களைக் கொண்ட செல்பேசிகளை வாங்க மாட்டார்கள் என்பது பட்டவர்தனமான உண்மை.

#TamilSchoolmychoice

எனினும், இவ்வகை செல்பேசிகளை ஆப்பிள், சாம்சுங் மற்றும் மைக்ரோசாஃப்ட் உட்பட பெரிய நிறுவனங்கள் வெளியிடுவதை தவிர்த்து வந்தன. இந்நிலையில், அடிப்படை செல்பேசிகளுக்கான சந்தைகளை சீனாவின் உள்நாட்டு நிறுவனங்கள் பெரும்பான்மையாக ஆக்கிரமித்து விட்டன.

அடிப்படை செல்பேசிகளில் இருந்து திறன்பேசிகளுக்கு மாற முயற்சிக்கும் நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்கள், சீனத் திறன்பேசிகளையே வாங்க முயற்சி செய்கின்றனர். இதனை உணர்ந்த மைக்ரோசாஃப்ட் தற்போது விலை குறைந்த அடிப்படை செல்பேசிகளை அறிமுகம் செய்துள்ளது.

ஒற்றை மற்றும் இரட்டை சிம் அட்டை‘ (SIM Card) வசதிகள் கொண்டதாக இரு வேறு ரகங்களில் வெளிவந்துள்ள நோக்கியா 130 செல்பேசிகளில் காணொளிகளை பார்க்கவும், பாடல்களை கேட்கவும் சிறந்த இசை இயக்கி‘ (Music Player) வசதியைக் கொண்டுள்ளது. 

32 ஜிபி நினைவக அட்டையை பொருத்தக்கூடிய வசதி கொண்டுள்ள இந்த செல்பேசிகளின் மின்கலம் 1020m Ah ஆகும். 

அடிப்படை செல்பேசிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது சிறந்த தேர்வாக மைக்ரோசாஃப்டின் இந்த நோக்கியா 130 செல்பேசிகள் இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை, எனினும் மொசில்லா நிறுவனம் அதே 25 அமெரிக்க டாலர்களுக்கு அடிப்படை வசதிகள் கொண்ட திறன்பேசிகளை வெளியிட இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்து இருந்தது. அந்த திறன்பேசிகள் சந்தைகளில் வர்த்தகத்திற்கு வராத வரை நோக்கியா 130 செல்பேசிகளுக்கு பாதிப்பில்லை.