Home கலை உலகம் ‘மைந்தன்’ நான்கு நாட்களில் அரை மில்லியன் ரிங்கிட் வசூல்!

‘மைந்தன்’ நான்கு நாட்களில் அரை மில்லியன் ரிங்கிட் வசூல்!

882
0
SHARE
Ad

Maindhanகோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – கடந்த ஆகஸ்ட் 7 -ம் தேதி, மலேசியா முழுவதும் 34 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட மலேசியத் திரைப்படமான ‘மைந்தன்’. கடந்த நான்கு நாட்களில் சுமார் அரை மில்லியன் ரிங்கிட் வசூல் ஆகியுள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் கடத்தல் பற்றிய கதையை மையமாக வைத்து பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள ‘மைந்தன்’ திரைப்படத்தை பிரபல மலேசிய நடிகர் சி.குமரேசன் தயாரித்து இயக்கி, நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தை ஆஸ்ட்ரோ ஷா மற்றும் எஸ்எஸ் வாவாசான் இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

‘மைந்தன்’ திரைப்படத்தில் கதாநாயகன் குமரேசனுடன், புன்னகைப்பூ கீதா, ஷைலாடிஎச்ஆர் ராகா உதயா, டார்க்கி, சீஜே, ராபிட் மேக், விக்னேஸ்வரி, ஷாமினி, கேஎஸ் மணியம், ஏகவல்லி என பிரபல மலேசிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.