Home கலை உலகம் ‘அஞ்சான்’ படத்தில் சூர்யா பாடிய பாடல் யூ டியூபில் வெளியானது (காணொளியுடன்)!

‘அஞ்சான்’ படத்தில் சூர்யா பாடிய பாடல் யூ டியூபில் வெளியானது (காணொளியுடன்)!

706
0
SHARE
Ad

anjaan-4சென்னை, ஆகஸ்ட் 12 – ‘அஞ்சான்’ படத்தில் சூர்யா பாடிய ஏக்..தோக்..தீன்… பாடலின் காணொலி யூடியூபில் வெளியாகியுள்ளது. சூர்யா, சமந்தா, சூரி ஆகியோர் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘அஞ்சான்’.

இப்படம் வரும் 15-ம் தேதி உலகம் முழுவதும் 650 திரையரங்குகளுக்கு மேல் வெளியாக உள்ளது. இப்பத்தின் முதல் பிரத்தியேக காட்சி கோலாலம்பூரில் வரும் வியாழக்கிழமை 14.8.2014 மாலை 6.00 மணிக்கு திரையிடப்படுகிறது.

anjaan-2இவ்விழாவிற்கு சூர்யா, சமந்தா, சூரி,  இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் சூர்யா பாடிய ஏக்..தோக்..தீன்… பாடலின் காணொளி யூடியூபில் வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

படம் வெளியாவதற்கு முன்பு காணொளியுடன் பாடல் சன் டிவியில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த பாடல் காட்சி தற்போது யூடியூபிலும் பகிரப்பட்டுள்ளது. அதை கீழே உள்ள இணைப்பின் வழியாகக் காணலாம்.

http://youtu.be/6pEwPSwpPuc