நேற்றிரவு, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாம்பூர் பகுதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
இரவு 10.15 மணியளவில் எல்லை பாதுகாப்பு வீரர்கள் வாகனத்தை குறிவைத்து இரண்டு புறங்களில் இருந்தும் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
தாக்குதலுக்கு ஏ.கே-47 ரக துப்பாக்கியை தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் தப்பித்துச் சென்றனர். காயமடைந்த வீரர்கள் மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக அவர் காஷ்மீர் வந்துள்ளார். இந்நிலையில், பிரதமர் வருகைக்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.