அமெரிக்க அரசின் இரகசியங்களை வெளியிட்டது, சுவீடன் அரசின் பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஈக்வடார் தூதரகத்தில் இரண்டு ஆண்டுகளாக தஞ்சம் அடைந்திருந்த அசாஞ்சே, தம்மீது தொடரப்பட்ட வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படாததால் தான் தூதரகத்தை விட்டு வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளார்.
எனினும், அவர் மீது அமெரிக்க அரசு தொடர்ந்துள்ள வழக்குகள் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டில் ஈக்வேடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்த அசாஞ்சேக்கு இதயம் மற்றும் நுரையீரல் கோளாருகள் ஏற்பட்டதாகவும், மேலும் அவர் தற்போது பார்வைக் குறைபாட்டினால் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அவ்வாறு அசாஞ்சே தூதரகத்தை விட்டு வெளியேறும் பட்சத்தில் அவரை கைது செய்ய தூதரகத்தை சுற்றிலும் லண்டன் காவல் துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.