இந்தியாவுடன் நல்லுறவு ஏற்படுவதையும், சுமூக உறவுடன் இரு நாடுகளும் திகழ்வதையும் பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தான் அதிகார வர்க்கத்தில் பலரும் விரும்பவில்லை என்பதையே இது காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்திய பாதுகாப்பு முகாம்களை நேற்று ஜெட்லி பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்
”வேண்டும் என்றே அவர்கள் அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்கள். முன்பு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் மட்டுமே எல்லை மீறினார்கள். இப்போது சர்வதேச எல்லையிலும் வாலாட்டுகிறார்கள்.
ஆனால் நமது வீரர்கள் எத்தகைய சூழலையும் சந்திக்கும் ஆயத்தத்தில் உள்ளனர். உரிய முறையில் அவர்கள் பதிலடி தருவார்கள் என்றார் ஜெட்லி. ஜெட்லியுடன் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் உள்ளிட்டோரும் பாதுகாப்பு முகாம்களை பார்வையிட்டனர்.