Home உலகம் ஈக்வேடார் தூதரகத்தை விட்டு வெளியேறும் விக்கிலீக்ஸ் அசாஞ்சே!

ஈக்வேடார் தூதரகத்தை விட்டு வெளியேறும் விக்கிலீக்ஸ் அசாஞ்சே!

530
0
SHARE
Ad

julian assangeலண்டன், ஆகஸ்ட் 19 – அமெரிக்க அரசின் இரகசியங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்ட விக்கிலீக்ஸ் அதிபர் ஜுலியன் அசாஞ்சே ஈக்வேடார் தூதரகத்தில் இருந்து வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க அரசின் இரகசியங்களை வெளியிட்டது, சுவீடன் அரசின் பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஈக்வடார் தூதரகத்தில் இரண்டு ஆண்டுகளாக  தஞ்சம் அடைந்திருந்த அசாஞ்சே, தம்மீது தொடரப்பட்ட வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படாததால் தான் தூதரகத்தை விட்டு வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளார்.

எனினும், அவர் மீது அமெரிக்க அரசு தொடர்ந்துள்ள வழக்குகள் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டில்  ஈக்வேடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்த அசாஞ்சேக்கு இதயம் மற்றும் நுரையீரல் கோளாருகள் ஏற்பட்டதாகவும், மேலும் அவர் தற்போது பார்வைக் குறைபாட்டினால் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

julian-assangeஇந்நிலையில் அவருக்கான மருத்துவ சிகிச்சை தூதரகத்தில் சரிவரக் கிடைக்காததால் அவர் தூதரகத்தை விட்டு வெளியேற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவ்வாறு அசாஞ்சே தூதரகத்தை விட்டு வெளியேறும் பட்சத்தில் அவரை கைது செய்ய தூதரகத்தை சுற்றிலும் லண்டன் காவல் துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.