Home நாடு எம்எச்17: இறுதி அஞ்சலி நிகழ்வை ஆர்டிஎம் நேரலையாக ஒளிபரப்பும்!

எம்எச்17: இறுதி அஞ்சலி நிகழ்வை ஆர்டிஎம் நேரலையாக ஒளிபரப்பும்!

660
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – எம்எச்17 விமானத்தில் பலியான மலேசியப் பயணிகளின் சடலங்கள் வரும் வெள்ளிக்கிழமை மலேசியா கொண்டுவரப்பட்டு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலுள்ள, பூங்கா ராயா வளாகத்தில் மாலை 7.30 மணியளவில் இறுதி மரியாதை செலுத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்வை அரசாங்க செய்தி நிறுவனமான ஆர்டிஎம் (Radio Televisyen Malaysia) நேரலை நிகழ்ச்சியாக ஒளிபரப்பவுள்ளது.

MH17

#TamilSchoolmychoice

(நேற்று முன்தினம் கேஎல்ஐஏ  விமான நிலையத்தில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட படம்)

மேலும், வானொலிகளான நேசனல் எப்எம், டிராக்ஸ் எப்எம்,  ஐஎப்எம் மற்றும் மின்னல் எப்எம் ஆகியவையும் இந்த நிகழ்வை ஒலிபரப்பவுள்ளன.

இது குறித்து மலேசிய ஊடகத்துறை மற்றும் நடப்பு செய்தி பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆம்ஸ்டெர்டாமில் இருந்து கொண்டு வரப்படும் மலேசியர்களின் சடலங்களுக்கு விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்படும் இந்த காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும், கிள்ளான் பள்ளத்தாக்கு வரை சாலை வழியாக சடலங்கள் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்படவுள்ளன. அதுவும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

“கிள்ளான் பள்ளத்தாக்கு, கூச்சிங், சரவாக் என பல மாநிலங்களில் நடைபெறவுள்ள இஸ்லாம் மற்றும் இஸ்லாம் அல்லாத பயணிகளின் இறுதி நிகழ்ச்சிகளை ஆர்டிஎம் நேரடியாக ஒளிபரப்பவுள்ளது” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.