Home இந்தியா காஷ்மீரில் தொடர் கனமழை: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு!

காஷ்மீரில் தொடர் கனமழை: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு!

470
0
SHARE
Ad

epaselect epa04385637 An Indian man watches the raging River Tawi during flash floods on the outskirts of Jammu, the winter capital of Kashmir, India, 05 September 2014. At least 65 people have died in different parts of Jammu and Kashmir after heavy rains caused flash floods and landslides triggered by the latest spell of rains while government has pressed into service its machinery to carry rescue operations.  EPA/JAIPAL SINGHஸ்ரீநகர், செப்டம்பர் 7 – காஷ்மீரில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு இதுவரை 90 பேர் உயிரிழந்துள்ளனர். பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதப்பதால், பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.

Floods in Indian Kashmirபல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்கள் முற்றிலும் அழிந்துள்ளன.காஷ்மீரில் கடந்த மூன்று நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. ஜம்மு பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 18 பேரும், காஷ்மீரில் 7 பேரும் உயிரிழந்தனர்.

Flash floods on the outskirts of Jammu, Indiaஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில், 70 பேருடன் சென்ற பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் இருந்தவர்களில் 5 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

Flash floods on the outskirts of Jammu, Indiaமற்றவர்களும் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. ரஜோரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

Floods in Indian Kashmir

வெள்ளத்தின் பாதிப்பினால் மக்கள் படும் அவதிகளைக் காட்டும் சில காட்சிகளை இங்கே காணலாம்.