Home உலகம் தீவிரவாதத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்  – ஒபாமா, கேமரூன் கூட்டறிக்கை!

தீவிரவாதத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்  – ஒபாமா, கேமரூன் கூட்டறிக்கை!

478
0
SHARE
Ad

Obama 2008கார்டிஃப், செப்டம்பர் 7  – தீவிரவாதத்திற்கு நாங்கள் அடிபணிந்து விட மாட்டோம் என அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

நேட்டோ தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரிட்டனின் வேல்சுக்கு வருகை புரிந்துள்ள ஒபாமா மற்றும் கேமரூனும், பத்திரிகையாளர்களுக்கு கூட்டாக அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

“நமது தகுதியை காப்பதற்கு நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். நமது மக்களை பாதுகாப்பது நமது கடமையாகும். சுய நன்மைக்காக மட்டுமின்றி உலக நன்மைக்காகவும் நாம் பாடுபட வேண்டும். அத்தகைய பணிகளில் வரும் சவால்களை நாம் எதிர் கொள்ளத் தயாராக வேண்டும். அடிபணிந்து விடக் கூடாது”

#TamilSchoolmychoice

உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்கவே நேட்டோ தலைவர்களின் கூட்டம் பிரிட்டனின் ஒரு பகுதியான வேல்சில் நடைபெறுகிறது.

உக்ரைனின் புதிய அதிபர் பெட்ரோ புரோஷென்கோவும் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்கள் நாடு ஐரோப்பாவுக்கு ஆதரவாக இருப்பதை உறுதி செய்தார்.

மேலும் இந்த கூட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் அமெரிக்க பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளது குறித்தும் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தின் இறுதி முடிவாக நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது நேட்டோவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும் என ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் மீது தாக்குதல் நடத்த நேட்டோ நாடுகளுக்கு ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி பிரிட்டனும், பிரான்சும் ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வரும் வான்வழி தாக்குதலில் இணைந்து செயல்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.