ஸ்ரீநகர், செப்டம்பர் 7 – காஷ்மீரில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு இதுவரை 90 பேர் உயிரிழந்துள்ளனர். பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதப்பதால், பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.
பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்கள் முற்றிலும் அழிந்துள்ளன.காஷ்மீரில் கடந்த மூன்று நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. ஜம்மு பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 18 பேரும், காஷ்மீரில் 7 பேரும் உயிரிழந்தனர்.
ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில், 70 பேருடன் சென்ற பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் இருந்தவர்களில் 5 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மற்றவர்களும் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. ரஜோரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
வெள்ளத்தின் பாதிப்பினால் மக்கள் படும் அவதிகளைக் காட்டும் சில காட்சிகளை இங்கே காணலாம்.