இதில் பாலிவுட் நடிகை நீத்து சந்திரா கறுஞ்சிவப்பு நிற சேலையணிந்து மிகக் கவர்ச்சியாக வந்திருந்தார். அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், அவரை சூழ்ந்து கொண்ட புகைப்படக்கலைஞர்களுக்கு மிகவும் அன்பாக படம் எடுக்க அனுமதியளித்தார்.
நீத்து சந்திரா தமிழில், மாதவன் நடித்த யாவரும் நலம், விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை, ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
அவரது அழகிய படங்களை கீழே காணலாம்:
படங்கள்- செய்திகள்: ஃபீனிக்ஸ்தாசன்
(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)