Home கலை உலகம் “சைமா” விருது விழா: பாலிவுட் நடிகை நீத்து சந்திரா (பிரத்தியேகப் படங்கள் – தொகுப்பு 5)

“சைமா” விருது விழா: பாலிவுட் நடிகை நீத்து சந்திரா (பிரத்தியேகப் படங்கள் – தொகுப்பு 5)

607
0
SHARE
Ad

IMG_3394கோலாலம்பூர், செப்டம்பர் 13 – நேற்று மாலை கோலாலம்பூரில் உள்ள நெகாரா அரங்கில் ‘சைமா’ எனப்படும் தென்னிந்திய திரைப்படங்களுக்கான அனைத்துலக விருதளிப்பு விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி மலேசியா சுற்றுலா வாரியத்தின் ஆதரவுடன் கோலாகலமாக நடந்தேறியது.

இதில் பாலிவுட் நடிகை நீத்து சந்திரா கறுஞ்சிவப்பு நிற சேலையணிந்து மிகக் கவர்ச்சியாக வந்திருந்தார். அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், அவரை சூழ்ந்து கொண்ட புகைப்படக்கலைஞர்களுக்கு மிகவும் அன்பாக படம் எடுக்க அனுமதியளித்தார்.

#TamilSchoolmychoice

நீத்து சந்திரா தமிழில், மாதவன் நடித்த யாவரும் நலம், விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை, ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

அவரது அழகிய படங்களை கீழே காணலாம்:

IMG_3397

IMG_3818

IMG_3819

படங்கள்- செய்திகள்: ஃபீனிக்ஸ்தாசன்

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)