தீர்ப்பை வழங்கிய நீதிபதி, “சிறைத் தண்டனையை அனுபவிப்பதற்கு முன் இரண்டு நாள் அவகாசம் எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களா?” என்று கேட்ட போது, “இல்லை! நான் சிறைக்குச் செல்ல தயாராகவே வந்திருக்கின்றேன்” எனத் துணிச்சலுடன் ஜெயலலிதா கூறியதாகவும் மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன் பின்னர் அவர், பெங்களூரு மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படுவார் எனத் தெரிகின்றது.