Home இந்தியா ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனை – பின்னர் பெங்களூரு மத்திய சிறைச்சாலை கொண்டு செல்லப்படுவார்!

ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனை – பின்னர் பெங்களூரு மத்திய சிறைச்சாலை கொண்டு செல்லப்படுவார்!

734
0
SHARE
Ad

jayalalithaபெங்களூரு, செப்டம்பர் 27 – சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள்  சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது, மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் பின்னர் அவர் பெங்களூரு மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படுவார் என்றும் இந்தியத் தகவல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீர்ப்பை வழங்கிய நீதிபதி, “சிறைத் தண்டனையை அனுபவிப்பதற்கு முன் இரண்டு நாள் அவகாசம் எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களா?” என்று கேட்ட போது, “இல்லை! நான் சிறைக்குச் செல்ல தயாராகவே வந்திருக்கின்றேன்” எனத் துணிச்சலுடன் ஜெயலலிதா கூறியதாகவும் மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

#TamilSchoolmychoice

அதன் பின்னர் அவர், பெங்களூரு மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படுவார் எனத் தெரிகின்றது.