கடந்த ஆண்டு இறுதியில், தாய்லாந்தின் பிரதமருக்கு எதிராக போராட்டக் குழுவினரால் கடுமையான கலவரம் தூண்டப்பட்டது. இதன் காரணமாக, கடந்த மே மாதம் 22-ம் தேதி முதல் அங்கு இராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டது.
சுற்றுலாத் தளங்களில் முக்கிய இடமான தாய்லாந்தின் பொருளாதாரம், சுற்றுலாத் துறையையே பிரதானமாக நம்பி உள்ள நிலையில், போராட்டம் இராணுவ ஆட்சி போன்ற சர்ச்சைகளால், அங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையத் துவங்கி உள்ளது.
கொலைச் சம்பவம் நடந்து மூன்று வாரங்கள் கழிந்துள்ள நிலையிலும், காவல்துறையினரால், கொலையாளிகளைக் கண்டறிய முடியவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், தாய்லாந்து அரசு பல ஆலோசனைகள் நடத்தி வருகின்றது.
அதில் முதல் கட்டமாக, பயணிகள் தங்களுக்கான விடுதியை தேர்ந்தெடுக்கும்போதே அவர்களின் அடையாள அட்டையை ஒத்த தனித்த எண்களுடன் கூடிய அடையாள கைப்பட்டையை அவர்களுக்கு வழங்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.
எனினும், தாய்லாந்தின் சுதந்திரத் தன்மையை விரும்பி சுற்றுலா வரும் பயணிகள், இந்த புதிய சட்ட விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.