Home உலகம் சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்க தாய்லாந்தில் புதிய சட்டம்!

சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்க தாய்லாந்தில் புதிய சட்டம்!

495
0
SHARE
Ad

pageantry_2075707iபாங்காக், அக்டோபர் 1 – தாய்லாந்தில் சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்க புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி இந்த புதிய சட்டம் இயற்றப்பட்டாலும், பயணிகள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களையே இது சந்தித்து வருகின்றது.

கடந்த ஆண்டு இறுதியில், தாய்லாந்தின் பிரதமருக்கு எதிராக போராட்டக் குழுவினரால் கடுமையான கலவரம் தூண்டப்பட்டது. இதன் காரணமாக, கடந்த மே மாதம் 22-ம் தேதி முதல் அங்கு இராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டது.

சுற்றுலாத் தளங்களில் முக்கிய இடமான தாய்லாந்தின் பொருளாதாரம், சுற்றுலாத் துறையையே பிரதானமாக நம்பி உள்ள நிலையில், போராட்டம் இராணுவ ஆட்சி போன்ற சர்ச்சைகளால், அங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையத் துவங்கி உள்ளது.

#TamilSchoolmychoice

Khao San Roadஇது போன்றதொரு சூழலில், கடந்த 15-ம் தேதி கடற்கரைப் பகுதியான கோடாவோ அருகில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் பெண் கொலையுண்டு கிடந்தது, இந்தப் பிரச்சனையைத் தீவிரப்படுத்தும் விதமாக அமைந்தது.

கொலைச் சம்பவம் நடந்து மூன்று வாரங்கள் கழிந்துள்ள நிலையிலும், காவல்துறையினரால், கொலையாளிகளைக் கண்டறிய முடியவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், தாய்லாந்து அரசு பல ஆலோசனைகள் நடத்தி வருகின்றது.

அதில் முதல் கட்டமாக, பயணிகள் தங்களுக்கான விடுதியை தேர்ந்தெடுக்கும்போதே அவர்களின் அடையாள அட்டையை ஒத்த தனித்த எண்களுடன் கூடிய அடையாள கைப்பட்டையை அவர்களுக்கு வழங்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

THAILANDஇதன் மூலம் அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடி உதவ இந்த முறை எளிதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. மேலும், மின்னணு கண்காணிப்புக் கருவி, பயணிகளுடன் உள்ளூர் மேற்பார்வையாளர் ஒருவரையும் இணைக்கு திட்டம் என்று, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாய்லாந்து சுற்றுலாத் துறை செயல்படுத்தியுள்ளது.

எனினும், தாய்லாந்தின் சுதந்திரத் தன்மையை விரும்பி சுற்றுலா வரும் பயணிகள், இந்த புதிய சட்ட விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது  குறிப்பிடத்தக்கது.