Home தொழில் நுட்பம் சீனாவில் அக்டோபர் 10-ம் தேதி ஐபோன் 6 வெளியாகிறது!

சீனாவில் அக்டோபர் 10-ம் தேதி ஐபோன் 6 வெளியாகிறது!

478
0
SHARE
Ad

iphone-6கோலாலம்பூர், அக்டோபர் 1 – ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 திறன்பேசிகள் எதிர்வரும் 10-ம் தேதி, சீனாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது புதிய தயாரிப்பான ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகளை கடந்த மாதம் 9-ம் தேதி, உலக அளவில் வெளியிட்டது.

ஐபோன்களின் விற்பனையில் முன்னணி இருக்கும் 9-து நாடுகளில் வெளியான, ஐபோன்கள் பெரும் வர்த்தகத்தினை ஈட்டி வருகின்றன. மேலும், வெளியிடப்படாத நாடுகளில் முன்பதிவுகளும் அதிக அளவில் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஆப்பிள் திறன்பேசிகளுக்கு சிறந்த விற்பனை சந்தையாக விளங்கி வரும் சீனாவில், ஐபோன் 6 திறன்பேசிகளை ஆப்பிள் தற்போது வரை வெளியிடவில்லை.

#TamilSchoolmychoice

இதற்கு முக்கியக் காரணம்சீனாவின் அரசு தொலைக்காட்சி ஊடகம் கடந்த ஜூலை மாதம், ஆப்பிளின் கருவிகளும், மென்பொருட்களும் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் என்று செய்தி வெளியிட்டது. மேலும், ஆப்பிள் தயாரிப்புகளை சீனாவில் விற்பனை செய்ய கடுமையான கண்காணிப்பு விதிமுறைகளையும் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் ஐபோன் 6, சீனாவின் பெரும்பாலான விதிமுறைகளை நிறைவேற்றி உள்ளதால், எதிர்வரும் 10-ம் தேதி சீனச் சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று ஆப்பிள் வட்டாரங்கள் கூறுகின்றன.

எனினும், சீனா அரசாங்கம் ஆப்பிளுக்கு திறன்பேசிகளின் விலை நிர்ணயம், தனி வரி மற்றும் மானியங்கள் வழங்குவதல் போன்றவற்றில், கூடுதல் சிரமங்களை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகின்றது. ஐபோன் 6 திறன்பேசிகள் 5,288 யுவான்களுக்கும் ($863), ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகள் 6,288 யுவான்களுக்கு ($1026) விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்பிளின் முந்தைய தயாரிப்பான ஐபோன் 5s திறன்பேசிகளும், 863 அமெரிக்க டாலர்களுக்கு தான் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், ஐபோன் 6 திறன்பேசிகளும் அதே விலையில் விற்பனை செய்யப்பட இருப்பது, சீனா அரசாங்கம், ஆப்பிளின் விலை நிர்ணயக் கொள்கைகளிலும் தலையிட்டுள்ளதாகவே பொது நோக்கர்களால் பார்க்கப்படுகின்றது.