Home உலகம் மங்கள்யான் சாதனையை நியூயார்க் டைம்ஸ் கேலிசெய்ததா? – புதிய சர்ச்சை! 

மங்கள்யான் சாதனையை நியூயார்க் டைம்ஸ் கேலிசெய்ததா? – புதிய சர்ச்சை! 

728
0
SHARE
Ad

Mars-orbiterநியூயார்க், அக்டோபர் 7 – இந்தியாவின் மங்கள்யான் சாதனையை அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான ‘தி நியூயார்க் டைம்ஸ்’ (The New York Times) கேலிச் சித்திரமாக வரைந்தது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், இந்தியா தனது கனவுத் திட்டமான மங்கள்யானை முதல் முயற்சியிலேயே செயல்படுத்தி, உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான தி நியூயார்க் டைம்ஸ், மங்கள்யான் சாதனை குறித்து கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டது.

#TamilSchoolmychoice

அதில் ‘எலைட் ஸ்பேஸ் கிளப்’ (Elite Space Club) என்று எழுதப்பட்ட ஒரு ஆடம்பர அறைக்குள் மேல் நாட்டவர் சிலர், இந்தியாவின் சாதனை பற்றிய பத்திரிகைகளில் படித்துக்கொண்டிருப்பர், அப்போது, பசு மாட்டை பிடித்துக் கொண்டு ஒரு விவசாயி அந்த அறையின் கதவை தட்டுவார்.

cartoon(3)அந்த விவசாயி ‘இந்தியா’ என்று எழுத்துக்களால் குறிப்பிடப்பட்டு இருப்பார். இந்த கேலிச்சித்திரம் இந்தியர்கள் மட்டுமின்றி, ஆசிய நாடுகள் உள்பட பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதன் காரணமாக அந்த பத்திரிக்கையின் அதிகாரபூர்வ வலைதளத்தில் இந்தியர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில், பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதையடுத்து, அந்த பத்திரிகை இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக அந்த பத்திரிக்கையின் தலையங்க ஆசிரியர் ஆன்ட்ரூ ரோசன்தால் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

“விண்வெளி ஆராய்ச்சி என்பது, பணக்கார நாடுகளின் ஏகபோக உரிமை அல்ல என்பதை உணர்த்தும் வகையில் தான் அந்த சித்திரம் வரையப்பட்டது. அதன் நோக்கம் இந்தியாவை இழிவுபடுத்த அல்ல. எனினும், இதன் காரணமாக யார் மனதாவது புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.